பொள்ளாச்சி அருகே கணவரை ஆள்வைத்து தாக்கிய சின்னத்திரை துணை நடிகை கைது - பரபரப்பு!

பொள்ளாச்சி அருகே சின்னத்திரையில் நடிக்க கூடாது என கூறிய கணவனை ஆண் நண்பரை வைத்து கத்தியால் தாக்கிய வழக்கில் சின்னத்திரை துணை நடிகை ரம்யா மற்றும் துணை நடிகர் டேனியல் சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே சின்னத்திரையில் நடிக்க கூடாது எனக்கூறிய கணவனை ஆண் நண்பரை வைத்து கத்தியால் குத்திய துணை நடிகை மற்றும் துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(42). இவருக்கும், உடையம்பாளையத்தை சேர்ந்த ரம்யா(30) என்பவருக்கும் திருமணமாகி பத்தாண்டுகளான நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ரமேஷ் தனியார் தொழிற் சாலையில் வேலை பார்த்து வருகிறார். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக ரம்யா கோவையில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்ற ரம்யா சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். இவர் அவ்வப்போது கணவனை பார்க்க பொள்ளாச்சி நல்லி கவுண்டம்பாளையம் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு கணவர் ரமேஷுடன் ரம்யா, இருசக்கர வாகனத்தில் முத்தூர் சாலையிலிருந்து நல்லிகவுண்டன் பாளையம் சென்று கொண்டு இருந்த போது திடீரென வழி மறித்த நபர் ரமேஷை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரமேஷின் மனைவி ரம்யா மீது சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டதில், ரம்யாவுடன் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகர் டேனியல் சந்திரசேகர் என்பவரை வைத்து கணவரை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த டேனியல் சந்திரசேகர் மற்றும் ரம்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது ரம்யாவின் ஆசை. ஆனால் கணவர் ரமேஷ் சின்னதிரையில் நடிக்க வேண்டாம் எனக் கண்டித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரம்யா தனது நண்பர் டேனியல் சந்திரசேகரை வைத்து, கணவரை தாக்க திட்டமிட்டது தெரியவந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...