ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதிநீக்கம் - திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கோவை மத்திய பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர், திராவிட இயக்கத்தினர், ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து ஜனநாயக, அரசியல் அமைப்புக்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் சுசி கலையரசன்,திராவிட விடுதலை கழகம், மாவட்ட பொறுப்பாளர் நேருதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...