தண்ணீர் குழாய்களில் மோட்டார் வைத்து உறிஞ்சினால் கடும் நடவடிக்கை - நகராட்சி அறிவிப்பு!

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்களில், சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுபவர்கள் இரண்டு நாட்களுக்குள், அகற்றவில்லை என்றால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிவிப்பு.


திருப்பூர்: உடுமலையில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர மக்களின் தாகம் தீர்க்க திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, குழாய்கள் மூலம் உடுமலைக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னர் இந்த தண்ணீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு பகுதி வாரியாக 33 வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஒருசில வீடுகளில் குடிநீர்க்குழாய் இணைப்பில் மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீரை உறிஞ்சுகின்றனர்.

இதனால் அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் குடிநீர் போதுமான அளவில் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் திருமூர்த்தி அணையின் நீர்இருப்பு வேகமாக குறையும் நிலை உள்ளது.

மேலும் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்யப் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சட்டத்துக்குப் புறம்பாக மின்மோட்டார் பொருத்தி இருந்தால், 2 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். அப்புறப்படுத்த தவறினால் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் எடுப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ .10 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...