உடுமலையில் நெடுஞ்சாலை புளியமரங்களில் அறுவடை பணிகள் தீவிரம்!

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை சாலைகளின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான புளியமரங்களில் புளி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலை பகுதியின் முக்கிய சாலைகளில் உள்ள புளியமரங்களில் புளி அறுவடை துவக்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட பிரதான சாலைகள், கிராம இணைப்பு சாலைகளின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான புளியமரங்கள் உள்ளன.



ஆண்டுதோறும், பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறுவடை சீசன் துவங்கும். புளியமரங்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, புளி, பறிப்பதற்கான ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டு சீசன் துவங்கியுள்ள நிலையில், சாலையோர மரங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளது.



கடந்தாண்டு, பருவமழை அதிகரித்ததால், காய் உருவாகும் சமயத்தில் பெய்த மழை காரணமாக, மகசூல் குறைந்தது. தற்போது சீசன் காரணமாக, வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. விதையுடன் கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

புளியம் பழங்களை தரம் பிரித்து, விற்பனை செய்யும் போது கூடுதல் விலை கிடைக்கிறது. கிராமங்களில், இத்தகைய பணிகளில் பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர்.

பழத்திலுள்ள கொட்டை மற்றும் நார் ஆகியவற்றை பிரித்து, விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...