கோவையில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவர் உட்பட இருவர் கைது!

கோவை செட்டிபாளையம் அம்பாள் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கல்லூரி மாணவர் கோகுல் (22) மற்றும் அவரது நண்பரான கோகுல் ஆகிய இருவரை கைது செய்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையம் அம்பாள் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

அப்போது, அவர்களிடம் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.



விசாரணையில் பிடிபட்ட நபர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோகுல் (22) என்பதும், இவரது நண்பர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கோகுல் (22) இவர் கல்லூரி மாணவர் கோகுலுடன் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் இவர்கள் வடமாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...