கோவை சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் கனமழை - 20,000 வாழை மரங்கள் சேதம்!

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் திடீரென காற்றுடன் பெய்த மழை வெளுத்து வாங்கிய நிலையில், வடம்பச்சேரி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரிமலை பகுதிகளில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.


கோவை: சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் காற்றுடன் பெய்த மழை காரணமாக 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது.

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் வடம்பச்சேரி, செஞ்சேரி புதூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளன.



பயிரிடப்பட்ட வாழைகள் 10 மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்நிலையில், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் பகுதிகளில் 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது. அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மரங்கள் சேதமடைந்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சுல்தான் பேட்டை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர்கள் சாய்கண்ணன், தினகரன், மந்திராசலம், வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரசாந்த் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...