கோவை இடையர்பாளையத்தில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

இடையர்பாளையம் பகுதியில் திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.



கோவை: கவுண்டம்பாளையம் பாஜக மண்டல அலுவலகத்தை மண்டல தலைவர் விஜயகாண்டீபன் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில், திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி விஜயகாண்டீபன் வரவேற்றார்.



இதைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மண்டல புதிய அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் கோவை மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து இடையர் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பீரித்திலட்சுமி, திருநாவுக்கரசு, கோபிநாத், ரமேஷ், பொருளாளர் செந்தில்குமார், மண்டல பொதுச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், மண்டல பொருளாளர் சுரேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக்குமார் மற்றும் மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...