சூலூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - பொதுமக்கள் திடீர் சாலைமறியல்!

சூலூர் பகுதியில் நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்த நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: சூலூர் அருகே கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அங்குள்ள சந்தைப் பகுதியில் மழைநீர் தேங்கி தெருக்கள் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

கனமழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்து தேங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய போராட்டக்காரர்கள், ஓராண்டுக்கு மேலாகியும் இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால், மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், வட்டாட்சியர் சுகுணா, கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் ரயில்வே பீட்டர் சாலை மற்றும் திருச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...