தனியார் பொருட்காட்சி நடத்த உடுமலை குட்டை திடல் ரூ.65 லட்சத்திற்கு ஏலம்!

உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அங்கு தனியார் பொருட்காட்சி நடத்த விடப்பட்ட ஏலத்தில் குட்டைத்திடல் ரூ.65.40 லட்சத்திற்கு ஏலம் போனது.


திருப்பூர்: உடுமலை குட்டை திடலில் தனியார் பொருட்காட்சி நடத்துவதற்காக ரூ.65.40 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, தனியார் பொருட்காட்சி நடத்துவதற்காக குட்டைத் திடல் ஏலம் இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கண்ணாமணி தலைமையில் நடைபெற்றது.



குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.46 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் நான்கில் ஒரு பங்கு தொகையான ரூ.11.50 லட்சத்தை அச்சாரத் தொகையாக செலுத்த வேண்டும் என வட்டாட்சியர் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 11 பேர் அச்சார தொகையான 11.50 லட்சம் டி.டி எடுத்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.



சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஏலத்தின் முடிவில் வாணியம்பாடியை சேர்ந்த மோகன் என்பவர் ரூ.65 லட்சத்திற்கு 40 ஆயிரத்திற்கு குட்டை திடல் பகுதியில் பொருட்காட்சி அமைக்க ஏலம் எடுத்தார்.

கடந்தாண்டு குட்டை திடல் ரூ.41 லட்சத்திற்கு ஏலம் போன நிலையில் இந்தாண்டு கூடுதலாக ரூ.46 லட்சம் ஏல உரிமைத்தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பரபரப்பான ஏலம் மூலமாக ரூ.65 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...