தொலைந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க புதிய வலைத்தளம் அறிமுகம்!

தொலைந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவும் வகையிலும், Block செய்யவும், கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட் போனை Unblock செய்யவும், மத்திய தொலை தொடர்புத்துறை சார்பில் CEIR என்ற புதிய வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



டெல்லி: தொலைந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவும் வகையில் CEIR என்ற புதிய வலைத்தளத்தை மத்திய தொலை தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றால் அது மிகையல்ல. ஸ்மார்ட்போன் என்பது, வெறும் அழைப்புகளை செய்வதற்கும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் பயன்படும் சாதனங்கள் அல்ல. ஸ்மார்ட் போன்கள் மூலம் தற்போதைய இணைய உலகில் எதை வேண்டுமானாலும் சாத்திய படுத்த முடியும்.

தற்போதய காலக்கட்டத்தில் மனிதர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்தால் தான் அவர் உயிருடன் இருப்பதாகவே எண்ணுகின்றனர். இவ்வாறு பயன்படும் ஸ்மார்ட்போன் தொலைந்து போவதோ அல்லது திருடப்படுவதோ மிகவும் மோசமான விஷயமாகும்.



இந்நிலையில் நீங்கள் தொலைத்த அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவியாக தொலைதொடர்புத் துறை சார்பில், மத்திய உபகரண அடையாள பதிவேடு (Central Equipment Identity Register - CEIR) என்ற பிரத்யேக வலைத்தள பக்கம் (Website) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.



இந்த வலைத்தள பக்கத்தில் தொலைந்து போன ஸ்மார்ட்போனின் IMEI எண்ணுடன் புகார் அளித்தால், திருடப்பட்ட அல்லது தொலைந்த ஸ்மார்ட் போன்களை Block செய்யலாம். கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை Unblock செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போனை வாங்க போகிறீர்கள் என்றால் அந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்களைக் கண்டறிய இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...