பல்லடம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி!

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் பாரம்பரிய உணவுகள், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட அருள்புரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டன.



இதில், பாரம்பரியமான சிறு தானிய உணவு வகைகள், திருமணமான புதுமண தம்பதிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள், குழந்தைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என விதவிதமான உணவு முறைகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தினர்.



எள் உருண்டை, சிறுதானிய பாயாசம், கடலை உருண்டை, சத்துமாவு பாயாசம், காய்கறி சூப் போன்ற பல்வேறு விதமான உணவு வகைகளை போட்டியில் காட்சிப்படுத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக வட்டார அளவிலான போட்டியிலும், அதில் வெற்றி பெறும் குழுவினர் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற அழைத்துச் செல்லப்படுவர் என மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...