சூலூரில் குடிக்க பணம் கொடுக்க மறுத்த வருவாய் அதிகாரி பைக் திருட்டு - இளைஞரின் சிசிடிவி காட்சி வைரல்!

சூலூர் அருகே குடிப்பதற்கு பணம் கேட்டு கொடுக்க மறுத்த வருவாய் அதிகாரியின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வரும் நிலையில், திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: சூலூர் அருகே குடிக்க பணம் கொடுக்க மறுத்த வருவாய் அதிகாரியின் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூர் மாரியம்மன் கோவில் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்ற அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், வருவாய் அலுவலரிடம் மது குடிப்பதற்காக ரூ.50 பணம் கேட்டுள்ளார்.

ஏற்கனவே அந்த இளைஞர் அதிக போதையில் இருந்ததால், வருவாய் அதிகாரி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வருவாய் அதிகாரியின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, வருவாய் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குடிக்க பணம் கொடுக்க மறுத்த அதிகாரியின் இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...