தாராபுரம் அருகே ரூ.190 கோடியில் 25 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் - அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

தாராபுரம் அடுத்த வடுகப்பட்டியில் ரூ.190 கோடி மதிப்பில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் 110 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கிலோ வாட் தனியார் துணைமின் நிலையம், 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.190 கோடி மதிப்பில் 25 மெகாவாட் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வடுகப்பட்டியில் 190 கோடி மதிப்பில் கோவையைச் சேர்ந்த மின் சக்தி நிறுவனமான நற்றிணை வென்ச்சர்ஸ் சார்பில் 110 ஏக்கரில் 110/33 கிலோ வாட் தனியார் துறை துணை மின் நிலையம் மற்றும் 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல மின்சார வாரிய முதன்மை பொறியாளர் வினோதன், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன், இந்திய காற்றாலை மின் உற்பத்தி உரிமையாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரிரங்கன் உட்பட ஏராளமான தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...