அதிமுக பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். தேர்வு - திருப்பூரில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பூரில் குமரன் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினர், பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.


திருப்பூர்: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை திருப்பூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்கப்பட்டார். இதனை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



இந்நிலையில், திருப்பூரில் குமரன் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினர்,



பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அப்போது, அதிமுகவின் நிரந்தப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க, வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என அதிமுகவினர் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...