கோவையின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம், தெற்கு பேரூர் பகுதி-II, சி.எம்.சி காலனி பகுதி-II. வெரைட்டி ஹால் ரோடு ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம், தெற்கு பேரூர் பகுதி-II, சி.எம்.சி காலனி பகுதி-II. வெரைட்டிஹால் ரோடு, ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ஜெகநாதன், உதவி நிர்வாக பொறியாளர்கள் ராஜேந்திரன், சுதர்சன் உடனிருந்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூர் வடக்கு பகுதி 1 பேரூர் தெற்கு பகுதி-2 எழில் நகர், வெரைட்டிஹால் ரோடு, பச்சனம்பதி, எம்.ஜி.ஆர் நகர், வால்பாறை, உக்கடம் பகுதி 4. சிக்கதாசம் பாளையம், சுந்தரம் வீதி, சி.எம்.சி.காலனி , சித்தாப்பதூர் பகுதி-2 முல்லை நகர் ஆகிய இடங்களில் 15 திட்டப்பணிகள் மூலம் 4283 குடியிருப்புகள் 389,91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.46.44 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.8.80 லட்சம் செலவில் 528 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தெற்கு பேரூர் பகுதி-II திட்டப்பகுதியில் ரூ.25.63 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.8.90 லட்சம் செலவில் 288 குடியிருப்புகளும், வெரைட்டிஹால் ரோடு திட்டப்பகுதியில் ரூ.45.05 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.10.05 லட்சம் செலவில் 448 குடியிருப்புகளும், சி.எம்.சி காலனி பகுதி-II திட்டப்பகுதியில் ரூ.49,40 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.9.50லட்சம் செலவில் 520 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறையும், ஒரு சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் பயன்பாட்டு பகுதியுடன் கட்டப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, செல்வபுரம், தெற்கு பேரூர் பகுதி-11. சி.எம்.சி காலனி வெரைட்டிஹால் ரோடு, ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும்,விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...