அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? -தாராபுரம் தெருமுனை பிரச்சாரத்தில் சி.பி.எம் கேள்வி!

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது. இப்பிரசாரத்திற்கு சிபிஎம் தாலூகா செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.

பிரச்சாரத்தின் போது நாட்டில் நிலவி வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் வாழ்வாதாரங்கள் மீது தொடர் தாக்குதல், பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிப்பது, அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பிரச்சார இயக்கத்தின் போது கூட்டுக்களவாணிகளின் ஊழல் சாம்ராஜ்யம் குற்றவாளிக்கூண்டில் அதானி - மோடி பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், கண்ணுசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...