புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு - கோவையில் அரசு ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு அலுவலகங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.


கோவை: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் அரசு ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 21 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்குவது, காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கம் வேண்டும்.

இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அரசு ஊழியர்களின் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...