அடிப்படை வசதிகள் செய்து தராமல் புறக்கணிப்பு -கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மேயரிடம் மனு!

கோவை காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் புறக்கணித்து வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.


கோவை: கோவை காளப்பட்டி பெரியார் நகரில் அடிப்படை வசதிகளை செய்து தராமல் புறக்கணிப்பதாக பொதுமக்கள் மேயரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக எந்த வித அடிப்படை வசதியும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 37 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், அதுவும் முறையான பராமரிப்பின்றி தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



இதேபோல், வடிகால் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை எனக் கூறி, இப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.

இதனையடுத்து பேசிய அப்பகுதி மக்கள், தங்களது பகுதியில் உள்ள அரசு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் 3 முறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், அடிப்படை வசதி மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்சனை உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு காண வலியுறுத்தி மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் மனு அளித்த காளப்பட்டி பெரியார் நகர் பகுதி மக்களிடம், மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...