ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்


புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், வர்தா புயலுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. தற்போது தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என தெரிவித்தார்.

மேலும், புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு பின்பு டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் எனவும் குறிப்பிட்டதுடன் மத்திய அரசு அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அதற்காக தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருமாவளவன், தருமபுரி இளவரசன் வழக்கு சிபிசிஐடி-க்கு கொடுக்கப்பட்ட போதே இந்த முடிவை தாங்கள் எதிர்பார்த்ததாகவும், தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டிற்கு  செல்ல வேண்டும் என்பதே தங்களின் கருத்து எனவும் கூறினார்.

சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பது அவை விதிகளில் இல்லை என சொல்லப்பட்டாலும், சட்டப்பேரவை தலைவர் எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கலாம் எனவும், சட்டமன்றத்தில் சபாநாயகர் சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்று இருந்தால் தமிழக முதலமைச்சர் அதை வெளிப்படையாக கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், முதலமைச்சர் ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...