அதிமுக பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் தேர்வு - உடுமலை அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, உடுமலையில் உள்ள திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் அதிமுகவின் கொண்டாடி வருகின்றனர்.



இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி சாலையில் உள்ள திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பும், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சிவசக்தி காலனி பகுதியிலும், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெதப்பம்பட்டி நால்ரோடு சந்திப்பிலும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.



இந்த இடங்களில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் அறிவுறுத்தல்படி அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...