அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு - துடியலூரில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக கோவை மாவட்டம் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக கோவை மாவட்டம் துடியலூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்.



இதனை தமிழகமெங்கும் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பகுதி செயலாளர் மாரிசாமி மற்றும் ஐ.டி.விங் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...