கோவை நரசீபுரம் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவி மீது தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் கைது!

கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புகுந்து கல்லூரி மாணவியை தாக்கிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவின் (22) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சிஏ) 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும் கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவீன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஆட்டோ ஓட்டுனர் பிரவீன் மதுபோதைக்கு அடிமையானதன் காரணமாக கடந்த 6 மாதங்களாக இளம்பெண், பிரவீனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை நரசீபுரம் கல்லூரிக்கு சென்ற பிரவீன் கேன்டீனில் நின்று கொண்டிருந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் பிரவீனை பிடித்து ஆலாந்துறை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கல்லூரி மாணவியை தாக்கி மிரட்டல் விடுத்த பிரவீனை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...