கோவையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கோரிக்கை மனுக்களுடன் குவிந்த மக்கள்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ (28.03.2023) நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 41 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌. மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில், மேயரிடம் பொதுமக்கள் 41 கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ (28.03.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌, துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ ஷாமிளா ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்.



இக்கூட்டத்தில்‌ மேயரிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய 41 மனுக்கள்‌ பெறப்பட்டன.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ அண்ணாதுரை, மகேஷ்கனகராஜ்‌, முத்துராமலிங்கம், மோகன சுந்தரி, சேகர், உதவி ஆணையாளர்(வருவாய்‌) செந்தில்குமார்‌ ரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜ்‌, நகரமைப்பு அலுவலர்‌ கருப்பாத்தாள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...