கடைகளில் தமிழ்ப் பெயர்ப்பலகை விவகாரம் - பாமகவுக்கு விக்கிரமராஜா வேண்டுகோள்!

தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கோவை: ஈரோட்டில் வரும் மே மாதம் 5 ஆம் தேதி வணிகர் தின மாநில மாநாடு நடைபெறுகிறது. இது குறித்த கோவை மண்டல சிறப்பு ஆலோசனைக் கூட்டம், கோவை சாய்பாபா காலனி உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:



வணிகர் உரிமை மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். அனைத்து மாநில தலைவர்கள், மாநில அமைச்சர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் 5 ஆண்டு என்பதை ஓராண்டாக உணவு தர நிர்ணயம் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், ஜி.எஸ்.டி.யை எளிமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டின் மூலம் வலியுறுத்தப்படும்.

ஏப்ரல் 18"ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். எம்.ஆர்.பியைக் கொண்டு வணிகர்களை வஞ்சிக்கும் கார்ப்ரேட்டிற்கு அரசு துணை போவதாக தோன்றுகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்.

இவ்விவகாரத்திற்கு, ஒரு மாத அவகாசம் என்பது போதாது. எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கு தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கக்கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...