தென்னையை அழிக்கும் கருந்தலைப் புழுக்கள் - கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

கோவை, சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்களில் கருந்தலைப் புழுத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: "தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு" என்ற பாடல் வரியை பொய்யாக்கியுள்ளது இந்தக் கருந்தலைப் புழு. தென்னையை பெத்தாலும் தற்போது கண்ணீர் என்று வேதனையில் உள்ளனர் கோவையை சேர்ந்த தென்னை விவசாயிகள்... காரணம் இந்தக் கருந்தழை புழு தாக்குதல்தான்.



தென்னை மரங்களின் இலைகளில் உள்ள பச்சையத்தை மட்டுமே உணவாக உட்கொண்டு, ஒரு இலை தொடங்கி மரங்கள் வரை அழித்து வளரும் புழுதான் இந்த கருந்தாலைப் புழு. சிறிய முட்டை வடிவத்தில் தோன்றி, பல்கி பெருகி காற்று செல்லும் திசையெல்லாம் கண்டம் விட்டு கண்டம் தாவுவதுபோல் ஒரு தோப்பில் உள்ள ஒரு தென்னை மரத்தைக்கூட விட்டுவிடாமல் பரவி அழிக்கும் இந்த கருந்தாலைப் புழு என்னும் கொடிய அரக்கனை கண்டு பயந்து நடுங்குகின்றனர் கோவை விவசாயிகள்.



குறிப்பாக, சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கணியூர் சுற்று வட்டாரம் முழுவதிலும் உள்ள தென்னந்தோப்புகள் அனைத்தும் இந்த கருந்தழை புழு தாக்குதாலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.



இந்த புழுத் தாக்குதலால் தென்னை மரங்கள் கருகி நிற்கின்றன. வெள்ளை ஈ தாக்குதல் போன்றே இதன் தாக்குதல் வியூகமும் இருப்பதால் வெள்ளை ஈதான் தாக்கியுள்ளது என்று நினைத்து அதற்கான ஒட்டுண்ணிகளை வைத்து அழிக்க நினைத்த விவசாயிகளுக்கு பின்புதான் தெரிந்தது இது வெள்ளை ஈ இல்லை.. கருந்தழை புழு என்பது...

இது குறித்து வேளான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தபோதும், துரிதமான நடவடிக்கை எடுப்படவில்லை என்றும், அவர்கள் அளித்த ஒட்டுண்ணியால் எந்த பலனும் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

தேங்காய்க்கு விலை இல்லை, கொப்பரைக்கு விலை இல்லை என சிறுசிறு இடிகளை தாங்கிவந்த தங்களின் தலையில் தற்போது பேரிடியாக விழுந்துள்ளது இந்த கருந்தழை புழு தாக்குதல் என்கின்றனர் விவசாயிகள்.



தாக்குதலுக்குள்ளான தென்னை மரங்களில் குருத்து வெடிக்காமல் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படும் மகசூல் குறைந்து தென்னையை பிரதானமாக கொண்டு இயங்கும் தேங்காய், மட்டை, நார் சார்ந்த தொழில்கள் முடங்கும் என்றும் தென்னை விவசாயிகள் மட்டுமல்லாது இதனை நம்பியுள்ள அனைத்து தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த கருந்தலைப் புழுத் தாக்குதலுக்கு காரணம், பருவகால மாற்றமா? பூச்சிக்கொல்லி மருந்துகளா? தொழிற்சாலை கழிவுகளா? எனத் தெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர் விவசாயிகள். கோடை காலத்தில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இந்த கருந்தலைப் புழுதாக்குதல் அதிகளவில் இருக்கும்.

தமிழக அரசும், வேளாண் துறையும் உடனடியாக இந்த தாக்குதல் குறித்து நேரடி கள ஆய்வு செய்து, பாதிப்பு அதிகரிக்கும் முன்பே தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.



மேலும், கருந்தலைப் புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னை விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, தென்னை விவசாயிகளின் துயர் துடைக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்..

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...