பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் - உடுமலை மக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளின் இருக்கை, குடிநீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அது தவிர வெளிமாவட்ட பேருந்துகளும் உடுமலை பேருந்துநிலையத்திற்கு வந்து செல்கின்றன.



நாள்தோறும் பயணிகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வரும் சூழலில், பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது:

உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளிமாவட்ட மக்கள் ஒன்றிணைந்து பிரிந்து செல்லும் இடமாக உடுமலை மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு பேருந்துக்காக காத்துக் நிற்கும் பயணிகளுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவில்லை.



இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாலும் உள்ளதால் மணிக் கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது. அல்லது தரையில் அமர வேண்டிய சூழல் உள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்கிறார்கள்.



முக்கியமாக அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சுகாதார வளாக வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. ஆண்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.

உடுமலை மத்திய பஸ் நிலையம் என்பது சுற்றுப்புற கிராம பொதுமக்களை ஒன்றிணைக்கும் பகுதியாகும். இங்கு ஏற்படுகின்ற சிறு குறைபாடு கூட அனைத்து கிராமங்களிலும் எதிரொலிக்க கூடிய சூழல் உள்ளது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருக்கைகள், குடிநீர், சுகாதார வளாக வசதி உள்ளிட்டவற்றை அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...