உதகையில் மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா - இருளர் இன இளைஞர்கள் உற்சாக நடனம்!

உதகை அருகே சீகூர் வனபகுதியில் உள்ள இருளர் இன பழங்குடியின மக்களின் குல தெய்வமான மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வழிபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இருளர் என்ற ஆதிவாசி மக்கள் உதகை அருகே உள்ள ஆனைகட்டி, சிறியூர், சொக்கநள்ளி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 10 கிராமங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்த மக்கள், தங்களது குலதெய்வமாக மாசி கரிய பண்ட அய்யனை வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவிலானது அடர்ந்த சீகூர் வன பகுதியில் அமைந்துள்ளது.



மிகவும் கரடு முரடான பாதை வழியாக இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வரும் இருளர் இன மக்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இந்தக் கோயிலுக்கான திருவிழாவை நடத்தி வருகின்றனர்.



அதன்படி, இந்த ஆண்டிற்கான கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து, 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவில் அமைந்துள்ள சீகூர் வன பகுதிக்கு சென்று கடந்து சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர்.



ஒவ்வொரு நாளும் தங்களது கலாச்சாரப்படி பல்வேறு பூஜைகளை செய்த அந்த மக்கள், இறுதியாக அலங்கரிக்கப்பட்ட புலி வாகனங்களில் எழுந்தருளிய மாசிக் கரிய பண்ட அய்யன் மற்றும் சிறியூர் மாரியம்மனை இருளர் இன இளைஞர்கள் தங்களது தோள்களில் சுமந்தவாறு கோயில் வளாகத்தில் நீண்ட நேரம் நடனமாடினர்.



அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொறியை வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கர்நாடகா மாநில பக்தர்களும் கோவிலுக்கு நடந்துவந்து வழிபட்டுச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...