திருப்பூரில் பள்ளி வாகனம் மோதி பெண் பலி - உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

திருப்பூரில் பள்ளி தனியார் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த ராதா என்ற பெண்ணின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து, வாவிபாளையம் சாலையில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் பாராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா.



இவர் காலையில் பள்ளியில் குழந்தையை விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பிச் சென்றபோது, திருப்பூர் கூலிபாளையம் நால்ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில் உள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி அருகே பள்ளியின் வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், ராதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார், சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, விபத்தில் பலியான ராதாவின் உறவினர்கள் அங்கு ஒன்று திரண்டனர்.

இந்த உயிர் பலிக்கு உரிய நியாயம் வேண்டும் என்றும், விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் சடலத்தை அப்புறப்படுத்த விடாமல் போலீசாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்த செல்ல அனுமதித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...