ஆன்லைன் ரம்மி விவகாரம்: பொள்ளாச்சியில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிராகரிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொள்ளாச்சியில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் உருவப் படத்தை கிழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி: ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதாவை நிராகரிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொள்ளாச்சி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாக்களை தொடர்ந்து நிராகரித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.



இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் பொள்ளாச்சி மத்திய தொலைபேசி நிலைய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆளுநர் ரவியின் உருவப்படத்தை கிழித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் ஆளுநர் ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.



பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...