ஊதிய உயர்வு கோரி திருப்பூரில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு எட்டப்படாததால், திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் எவர் சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் எவர் சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

பாத்திர உற்பத்தியை நம்பி 10,000-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். பாத்திர தொழிலாளர்கள் அதிக அளவில் உடல் உழைப்பை செலுத்தும் நிலையில் இவர்களுக்கான ஊதிய உயர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் உள்ளது.



இதனை அடுத்து பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 60% முதல் 70% வரை ஊதிய உயர்வும், அதே போல எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 50 சதவிகித ஊதிய உயர்வும் தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டது.



தொடர்ந்து வருவாய் துறை தொழிலாளர் நலத்துறை மற்றும் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 10 சதவிகித ஊதிய உயர்வும், பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 15% ஊதிய உயர்வும் மட்டுமே கொடுக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில் ஊதிய உயர்வை சரியான முறையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பாத்திர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பர்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...