ப்ரீத் அனலைசர் சர்ச்சை - சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்!

சென்னையில் மதுப்பழக்கமே இல்லாத நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயபேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலையில் சாலிகிராமம் நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பணியிலிருந்த சட்டம் ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்ட காவலர்கள் தீபக்கின் காரை மறித்து, அவர் மது அருந்தியுள்ளாரா என்று ப்ரீத் அனலைசர் கருவியை வைத்து சோதனை செய்தனர்.

அப்போது தீபக் மது அருந்தியதாகவும், அவரது உடலில் 45சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகவும் கூறி அவருக்கு அபராதம் விதித்தனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர், தனக்கு மது அருந்து பழக்கம் இல்லை என்றும், இயந்திரம் கோளாறாக உள்ளதாகவும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது தொடர்பான ரசீதில் கையெழுத்திடுங்கள் என கூறியுள்ளனர். ஆனாலும் அவர் தொடர்ந்து, தான் மது அருந்தவில்லை எனத் தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, போலீஸ் வாகனத்திலிருந்து, இரண்டு இயந்திரத்தை வைத்து சோதனை செய்ததில், அதில் தீபக் மது அருந்தவில்லை என்றும், அவரது உடலில் 0 சதவீதம் ஆல்கஹால் எனவும் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் போக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் தீபக் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களையும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்களையும் விட்டுவிட்டு 1000 வழக்குகள் கட்டாயம் பதிய வேண்டும் என்பதற்காக பழுதான இயந்திரத்தை வைத்து, சோதனை செய்து பொய் வழக்கு போடுகின்றனர்.

குடிப்பழக்கம் உள்ளாத தம்மிடம், குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம். இது காலத்திற்கும் என்னை துரத்தும் என வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.



இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரை இதுபோன்ற நிகழ்வு நடந்தது இல்லை. சென்னை காவல்துறையில் 320 ப்ரீத் அனலைசர் உள்ளன. அவைகளில் இதுபோன்ற பிரச்னைகள் இருந்ததில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...