உடுமலை அருகே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்திற்கு மின் இணைப்பு துண்டிப்பு

உடுமலைப்பேட்டை பெரியவாளவாடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்திற்கு வழங்கப்பட்டுள்ள மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், விஷேச நிகழ்வுகளின் போது மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும், அமைச்சர் தலையிட்டு மின்இணைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஆதிதிராவிடர் மக்களின் சமுதாய நலக்கூடத்தில் துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மீண்டும் வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெரியவாளவாடி ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் ஜே.ஜேநகர், பழையூர், சின்னவாளவாடி, பெரியவாளவாடி, மூலனூர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் இல்ல விசேஷங்களுக்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெரியவாளவாடி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. மேலும் கடந்த2001-ல் சந்தை வளாகத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுப் பராமரிப்பின்றி சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது.



தற்போது பெரியவாளவாடியை சார்ந்த ஆதிதிராவிடர் மக்கள் பெரியவாளவாடி கிராமத்தில் லயன்ஸ் அருகில் அமைந்துள்ள 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடத்தின் முகப்பில் தற்காலிக பந்தல் அமைத்து அதில் காதுகுத்து, கல்யாணம், சீர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டிடத்திலிருந்த மின் இணைப்புகள் பழுதடைந்த அதனை பராமரிப்பு செய்யாமல் சில ஆண்டுகளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவிஷேசங்களுக்கு மின்சார வசதிகளின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி மன்றத்தில் முறையிட்டும் பலனில்லை உள்ளூரில் உள்ள பிற மண்டபங்களில் சாதிய காரணங்களால் மண்டபம்வாடகைக்கு தர மறுத்து வருகிறார்கள்.

இந்த நவீன காலத்திலும் தனியார் மற்றும் பொது மண்டபங்களையும் பயன்படுத்த முடியாத சூழலில், தற்போதிருக்கும் சமுதாய நலக்கூடத்திற்கு மின் இணைப்பு வழங்கிட ஆவண செய்திடவேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கும் பதிவு தபாலில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...