உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் வியாபார சான்று வழங்கல்!

உடுமலை நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், அவர்களுக்கு மத்திய அரசின் வியாபார சான்று இன்று வழங்கப்பட்டன. இந்த சான்றுகள் பெற்ற வியாபாரிகள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நகராட்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் வியாபார சான்று வழங்கப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த சாலையோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணிகளை முடிந்த நிலையில் மத்திய அரசால் வழங்கப்பட்ட வியாபார சான்று அனைவருக்கும் இன்று வழங்கப்பட்டது.

கணக்கெடுப்பில் அனைவருக்கும் நகராட்சி மூலம் புதிதாக அடையாள அட்டை மற்றும் வியாபார சான்று வழங்கப்பட உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள சாலையோர வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெங்கடகிருஷ்ணா வியாபார மண்டலங்களாக அறிவிக்கப்படும். பழைய நகராட்சி பள்ளி வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் விற்பனை ஒழுங்குமுறை) துணை விதிகளின்படி வியாபார மண்டலங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார மண்டலங்கள் அமைக்கப்படும் இடங்களின் அரசு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் சதுர அடிக்கான ஆண்டு கட்டணம் மற்றும் குப்பைகள் அகற்றுதல் போன்ற பணிகளுக்கு மாத பராமரிப்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படும்.

மேலும் வியாபார சான்று வழங்கப்பட்ட இடத்திற்கு மாறாகவும். போக்குவரத்திற்கு இடையூறாகவும் வியாபாரம் செய்யும் பட்சத்தில் வியாபார சான்று, நகர வியாபார குழுவால் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...