கோவையில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு!

கோவை அன்னூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான வினோதினிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, குழந்தையின் தலை வெளியே வந்ததால், ஆம்புலன்ஸ் ஊழியர்களே அவருக்கு பிரசவம் பார்த்த நிலையில், அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய் - சேய் இருவரும் நலமுடன் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அன்னூரை சேர்ந்தவர் கோகுல் பிரசாந்த். இவரது மனைவி வினோதினி (20). நிறைமாத கர்ப்பிணியான வினோதினிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் மிகுந்த வலியுடன் துடித்த நிலையில், உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஊழியர்களுடன் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அப்போது குழந்தையின் தலை வெளியே வந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தினேஷ், பைலட் நந்தகோபால் உதவியுடன் வீட்டில் வைத்து வினோதினிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதன் பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தாயும்-சேயும் இருவரையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...