கோவை சிட்கோ அருகே ரயில் மோதி முதியவர் பலி

கோவை - பொள்ளாச்சி சாலை சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது கேரளாவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விசாரணையில் இறந்தவர் கோவை பேரூர் செட்டிபாளையத்தை சண்முகம் (82) என்பது தெரியவந்துள்ளது.


கோவை: சிட்கோ அருகே ரயில்மோதி தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் உயிரிழந்தார்.

கோவை - பொள்ளாச்சி சாலை சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது கேரளாவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.



இதையடுத்து ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலெட் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போத்தனூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் (82) என்பதும், இவர் புதன்கிழமை காலை ஈச்சனாரி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றதும், அப்போது சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய நிலையில், சிட்கோ அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.

போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...