கோவை வெள்ளலூரில் லாரி கிளினருக்கு கத்தி குத்து - இருவர் கைது!

கோவை வெள்ளலூரை சேர்ந்த லாரி கிளீனர் கோகுலகிருஷ்ணன் (23) பணம் கேட்டுக் கொடுக்காததால், ஆத்திரமடைந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுகுடிக்க பணம் கொடுக்காததால் லாரி கிளீனரை கத்தியால் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மது போதையில் நடந்து சென்றதாக தெரிகிறது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்புதீன் (25), கிஷோர் (25), ஆகிய இருவரும் கோகுலகிருஷ்ணனை இடைமறித்து மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

ஆனால் கோகுலகிருஷ்ணன் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சர்புதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலகிருஷ்ணனை குத்தி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் அங்கிருந்த கோகுலகிருஷ்ணனின் நண்பர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார், வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...