கோவையில் பேசமறுத்த இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய கல்லூரி மாணவர் கைது!

கோவை சுந்தராபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் பேச மறுத்ததால், அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்று தலைமறைவான கல்லூரி மாணவரான ஸ்ரீராமை குறிச்சி அருகே போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே பேசமறுத்த இளம்பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஷானவாஸ். இவரது மகள் ரேஷ்மா (20). தனியார் கல்லூரியில் 2 ஆண்டுகள் படித்துள்ளார், மேலும் படிப்பை நிறுத்தி விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் கல்லூரியில் படித்த போது, அவரது வகுப்பில் படித்து வந்த குனியமுத்தூர் விநாயகர் வீதியை சேர்ந்த ஸ்ரீராம் (20) என்ற இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரேஷ்மா கல்லூரி படிப்பை நிறுத்தியதில் இருந்து சுமார் 10 மாதங்களாக ஸ்ரீராமிடம் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இன்று வழக்கம்போல் ரேஷ்மா சுந்தராபுரம் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென அங்கு வந்த ஸ்ரீராம், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது முகத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது அவரது சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட ஸ்ரீராம் அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போத்தனூர் போலீசார் இளம்பெண்ணை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பிச்சென்ற கல்லூரி மாணவர் ஸ்ரீராமை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த மாணவர் ஶ்ரீராமை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...