சட்டவிரோத கல்குவாரியை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் - கோவையில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவையில் சட்டவிரோத கல்குவாரியை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது கல்குவாரி உரிமையாளர் மற்றும் குண்டர்கள் தாக்குதல் நடத்திய நிலையில். செய்தியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் கல்குவாரியை படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிணத்துக்கடவு நம்பர் 10.முத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை கோவையை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோர் படம் பிடித்து செய்தி சேகரிப்பதற்காக சென்றனர்.

அப்போது, அவர்களைத் தடுத்த சட்டவிரோத கல்குவாரி உரிமையாளர், கல்குவாரியை படம் பிடிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார். மேலும் குண்டர்களை வைத்து ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியிலேயே 'லைவ்' செய்யப்பட்டுள்ளன. இருந்த போதிலும், போலீசார் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.



இதனிடையே செய்தி சேகரிக்கச் சென்ற ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய கல்குவாரி உரிமையாளர் மற்றும் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை கோஷமிட்டபடி சென்று, மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...