திருப்பூரில் கடன் வாங்கியவர்களின் சொத்துகளை அபகரித்த பாஜக நிர்வாகி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!

திருப்பூர் அருகே கடன் வாங்கியவர்களிடம் ஆவணங்களை பெற்று ரூ.5.75 கோடி மதிப்பிலான சொத்துக்களை பா.ஜ.க மாவட்ட செயலாளர் ராஜா அபகரித்ததை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் கடன் வாங்கியவர்களின் ரூ.5.75 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரித்த பாஜக நிர்வாகியை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நிலையில். பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து அவர்கள் 3 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர்.



விசாரணையில் அவர்கள் தாராபுரத்தை சேர்ந்த சிவபாலமுருகன் மற்றும் அவரது மனைவி சித்ரா மற்றும் தாராபுரம் ஆச்சியூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாசிலாமணி ஆகியோர் என்பது தெரியவந்தது.



தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து சிவ பாலமுருகன் - சித்ரா தம்பதியினர் போலீசாரிடம் கூறியதாவது, வீடு கட்டுவதற்காகவும், குழந்தைகளின் படிப்பு செலவிற்காகவும் திருப்பூர் பா.ஜ.க தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா என்பவரிடம் ரூ.24 லட்சம் கடன் வாங்கினோம்.

இதற்கு ராஜா லட்சக்கணக்கில் வட்டி கேட்டார். இதனை கட்ட முடியாமல் இருந்து வந்த நிலையில். பணத்தை கட்ட வங்கியில் கடன் வாங்கி தருவதாகக்கூறி எங்களுக்கு சொந்தமாக பழனியில் உள்ள 2 ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை தங்களிடமிருந்து வாங்கி கொண்டார்.

மேலும், வங்கியில் கடன் வாங்கி தராமல் ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தினை அபகரித்து கொண்டார். இது குறித்து கேட்டதற்கு தரக்குறைவாக பேசி மிரட்டுகிறார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



அதேபோல் மாற்றுத்திறனாளி மாசிலாமணி கூறியதாவது, எனது தாயாரின் மருத்துவ செலவிற்காக ரூ.5 லட்சம் ராஜாவிடம் வாங்கியிருந்த நிலையில், வட்டிக்கு மேல் வட்டி கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

இதனையடுத்து ஆச்சியூரில் தனக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான வீட்டு ஆவணங்களை வைத்து கடன் வாங்கி தருவதாக கூறியதால் அவரை நம்பி கொடுத்தேன். ஆனால் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி, வீட்டை அபகரித்து விட்டார்.

மாற்றுத்திறனாளியாகிய தனது வீட்டை மீட்டு தருவதோடு, மோசடியில் ஈடுபட்ட பாஜக தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே பாஜக தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கடந்த நவம்பர் மாதம் பணியில் இருந்த ரமேஷ் என்ற காவலரை ஒருமையில் பேசி மிரட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, காங்கேயம் போலீசார் ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...