கொளுத்தும் கோடை - கோவையில் விறுவிறு விற்பனையில் குடிநீர் மண்பானைகள்!

கோவையில் கோடைவெப்பம் வாட்டி வதைத்துவரும் நிலையில், மக்கள் குளிர்ந்த தண்ணீரைக் குடித்து தாகத்தை தீர்த்துகொள்வதற்காக அதிக அளவில் மண்பானைகளை வாங்கத் தொடங்கியுள்ளதால், அதன் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.



வெளியில் செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளனர். மேலும், உடல் சூட்டை குறைப்பதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழச்சாறுகள், கரும்புச்சாறு, இளநீர், பதநீர், கூழ் போன்றவற்றை தேடித்தேடி அருந்தத் தொடங்கியுள்ளனர். இதனால், கோவை முழுவதும் குளிர்பானக் கடைகள் காட்டுத்தீ போல பெருகிவிட்டன.



அதேநேரத்தில், குடிநீரை, குளிர்ச்சியான நீராகக் குடிக்கும் நோக்கில் தற்போது மக்களின் கவனம் மண்பானைகள் பக்கமும் திரும்பியுள்ளது. குளிர்சாதனப் பெட்டிகள் வீடுகளில் உள்ளபோதும், மண்பானை மூலம் இயற்கையான முறையில் கிடைக்கும் குளிர்ந்த நீரை பருகவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

இதனால், கோவையில் பூமார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மண்ணால் செய்யப்பட்ட குடிநீர்ப்பானைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பைப் பொருத்தப்பட்ட குடிநீர் மண்பானைகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்த வகையான குடிநீர்ப் பானைகள் 400 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக மண் பானை வியாபாரி கூறுகையில், "வெயிலை சமாளிக்க, மண் பானை நீரை, மக்கள் அதிகம் குடித்து வருகின்றனர். மண்பானைகளால் சளி உட்பட உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்கள் மத்தியில் பிரபலமான களிமண் டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்களும் இங்கு விற்பனைக்கு உள்ளது. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...