கல்குவாரியை படம் பிடிக்க சென்ற ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் - கோவை பிரஸ் கிளப் கண்டனம்!

கோவையில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரி தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காகவும், படமெடுப்பதற்காகவும் சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது குண்டர்களை விட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவையில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கல்குவாரியை படமெடுக்க சென்ற ஒளிப்பதிவாளர் மீது குண்டர்களை விட்டு தாக்கிய சம்பவத்திற்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் வளர்ந்து வருகின்ற செய்தி ஊடகமான நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சியில் கோயமுத்தூர் மாவட்ட நிருபராக அருண்குமார், ஒளிப்பதிவாளராக பாலாஜி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கல்குவாரி தொடர்பான செய்திக்காக நிருபர் அருண்குமார், ஒளிப்பதிவாளர் பாலாஜி இவர்கள் கிணத்துக்கடவுக்கு சென்றிருக்கின்றனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள கல்குவாரியை படம்பிடித்து விட்டு திரும்பும்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட குண்டர் கும்பல், ஒளிப்பதிவாளர் பாலாஜியின் ஒளிப்பட கருவியை பறிக்க முயன்றுள்ளனர்.

மேலும், ஒளிப்பதிவாளர் பாலாஜியை தகாத வார்தைகளால் திட்டி கற்களை வீசி தாக்கியுள்ளனர். குண்டர்களின் தாக்குதலில் காயமடைந்த பாலாஜி ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் கல்குவாரியை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது குண்டர்கள் அராஜக போக்கில் நடத்திய கடும் தாக்குதலை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது. அதே சமயம் ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது வன்மம் கக்கிய நபர்களை உடனடியாக காவல்துறை கைது செய்ய வலியுறுத்துகின்றோம்.

ஒளிப்பதிவாளர் பாலாஜிக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை மற்றும் மருத்துவ ரீதியிலான உதவிகளுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் உறுதுணையாக உடன் பயணிக்கும். பாலாஜி மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம், பாலாஜிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்துகின்றது.

ஒளிப்பதிவாளர் பாலாஜி தாக்குதல் பின்னணியில் உள்ளவர்கள் மீதான நவடிக்கைக்கு மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆவண செய்ய கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் அறிவுறுத்துகின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...