கோவையில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் - ஒருவர் கைது, 2 பேர் தப்பியோட்டம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் இரவு நேரத்தில் பையில் சந்தனக் கட்டைகளுடன் சுற்றித்திரிந்த கும்பலை போலீசார் துரத்தியதில், சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய 2 பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலணி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையோடு மூன்று பேர் வந்துள்ளனர்.

போலீசார் நிற்பதைப் பார்த்த அவர்கள், அந்தப் பையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

அவர்களை போலீசார் விரட்டியதில், ஒருவர் பிடிப்பட்டார். அந்த நபர் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது32) கூலி தொழிலாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் சந்தனமரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாரிமுத்துவை கைது செய்த போலீசர் 12 சந்தனமரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற விஜய், சசிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...