மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலி - கோவை மாவட்டத்தில் முடங்கியது பம்ப்செட் தயாரிப்பு தொழில்!

வீடு மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பம்ப்செட்-களின் தேவை குறைந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் பம்ப்செட் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பம்ப்செட் தொழில் அழிவுக்கு மூலப்பொருட்கள் விலைஉயர்வு மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகளே காரணம் என்று தொழில்துறையினர் தெரிவித்தனர்.


கோவை: இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாய தேவைக்கான பம்ப்செட் பயன்பாட்டில் 55 சதவீதம் கோவையிலுள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி ஆகின்றன. கோவையில் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றம் 1,000-க்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒரு லட்சம் பேர் இத்தொழில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.



அரை (.5) எச்.பி முதல் அதிகபட்சமாக 50 எச்பி மற்றும் அதற்கு மேல் திறன்கொண்ட பம்ப்செட் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன. ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை பம்ப்செட் பொருட்கள் பல மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக கடந்த 8 மாதங்களாக பம்ப்செட் தொழில் நலிவடைந்துள்ளதாக தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(சீமா) தலைவர், விக்னேஷிடம் கேட்டபோது,

பம்ப்செட் உற்பதிக்கான மூலப்பொருட்கள் விலை தொடரந்து அதிகரித்துவருகிறது. வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பரில் சீசன் தொடங்கிவிடும். ஆனால், இந்தாண்டு தற்போதுவரை விவசாய பயன்பாடுக்கான பம்ப்செட் தேவை சந்தையில் அதிகரிக்கவில்லை. வீடுகளுக்கான பம்ப்செட் தேவை மட்டும் மிகவும் சிறிதளவு அதிகரித்துள்ளது.

நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கோவை மாவட்டத்தில் பல குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. பெரிய நிறுவனங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் வரை கட்டாய விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இதனால் நாடு முழுவதும் வீடு, விவசாய பம்ப்செட் தேவை அதிகரிக்கும் என்றும் பம்ப்செட் தொழில் புத்துயிர் பெறும் எனவும் நம்பி தொழில்முனைவோர் காத்திருக்கின்றனர், என்றார்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்(கோப்மா) தலைவர் மணிராஜிடம் கேட்டபோது, பெரிய நிறுவனங்களே தடுமாறும் நிலையில், குறுந்தொழில்முனைவோர் பலர் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் நிறுவனங்களை மூடிவிட்டனர். நான் உள்பட பலர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டோம். கோவை பம்ப்செட் தொழில் அழிவுக்கு மூலப்பொருட்கள் விலைஉயர்வு மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகளே காரணம், என்றார்.

தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம்(டேப்மா) தலைவர் கல்யாண் சுந்தரம் கூறுகையில், வீட்டு தேவைக்கான பம்ப்செட் தேவை சற்று அதிகரித்தது. விரைவில் குறைந்தது. நிதியாண்டு இறுதி மாதம் என்பதால் பம்ப்செட் தொழில் சற்று மந்தமாக உள்ளது. ஏப்ரல் முதல் தொழில் புத்துயிர் பெறும் என நம்புகிறோம், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...