கோவை மாவட்டத்தில் கனிமங்கள் கடத்தல் விவகாரம்- குழு அமைத்து தணிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்!

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மாநில எல்லை சோதனை சாவடிகளிலும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கனிம இருப்பு கிடங்குகளிலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிமங்கள் கடத்தலை தணிக்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலிருந்து கனிமங்கள் கேரளாவிற்கு உரிய நடைச்சீட்டின்றி கடத்தப்படுவதாக புகார்கள் வரப்பெற்று அது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மாநில எல்லை சோதனை சாவடிகளிலும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து தணிக்கை மேற்கொள்ளுமாறு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அனுமதி வழங்கப்பட்ட கனிம இருப்பு கிடங்குகளிலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிமங்கள் எடுத்துச்செல்ல புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மூலம் சீனியரேஜ் தொகை, கனிம அறக்கட்டளை நிதி மற்றும் பசுமை வரி ஆகியவற்றினை செலுத்திய பின்னரே 4 யூனிட் (12 க.மீ) பற்றும் 6 யூனிட் (18 க.மீ) அளவுகளில் போக்குவரத்து நடைச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், போக்குவரத்து நடைச்சிட்டில் நாள், நேரம் போன்ற விபரம் விடுபட்டிருந்தாவோ அல்லது பிழை திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக கனிமங்கள் ஏற்றிச் செல்லப்பட்டாலோ கனிமவளத்துறை, வருவாய்த்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு தகுந்த மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 24.02.2023 முதல் மார்ச் 2023 வரை 1,254 வாகனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜூலை 2022 முதல் மார்ச் 2023 வரையில் உரிய அனுமதியின்றி களிமம் கடத்தி சென்ற 54 வாகனங்கள் கனிம வளத்துறை மற்றும் வருவாய் அலுவலர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கனிமங்களை அதிகளவில் ஏற்றி சென்ற 94 வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குத்தகை காலம் முடிவுற்ற குவாரிகள் தொடர்ந்து செயல்படாமல் கண்காணித்திட மாவட்ட அளவிலான சிறப்பு பணிப்பிரிவு குழு கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை கண்டறியும் பொருட்டு இதுவரை 15-க்கும் மேற்பட்ட குவாரிகள் Total Station சர்வே செய்யப்பட்டதில் 2 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு உரிய அபராத நடவடிக்கைக்காக பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குவாரி குத்தகை வழங்கப்படும் நேர்வுகளில் அனுமதி கோரும் புலத்தினை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினரால் DGPS (Differential Global Positioning System)-ன் படி ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு எல்லைத் தூண்களும் நடப்படவேண்டும் என அனைத்து குத்தகைதாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...