தமிழகத்தின் முதல் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - சென்னை முதல் கோவை வரை இன்று சோதனை ஓட்டம்!

அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சென்னை முதல் கோவை வரை இயக்கப்படவுள்ளது. இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ன் சோதனை ஓட்டம் தொடங்கியது.


கோவை: இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்திற்கான ரயில்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.

ஏற்கனவே, இத்திட்டத்தின்கீழ் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுவதும் நிலையில், தமிழகத்தில் 11வது ரயிலாக கோவை முதல் சென்னை வரை இயக்கப்படும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ன் சோதனை ஓட்டம் தொடங்கியது.

காலை 8 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை வந்தே பாரத் ரயில் அடைந்தது. காலை 9.15 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை அடைந்த ரயில், 9.17 மணிக்கு மீண்டும் புறப்பட்டு, ஈரோடு ரயில் நிலையத்தை 10.05க்கு சென்றடைந்தது. அங்கிருந்து 10.07க்கு புறப்பட்ட ரயிலானது 10.45 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்தை அடைந்தது.

சென்னையிலிருந்து அதிகாலை புறப்பட்ட இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது நண்பகல் 11.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும். பின்னர் மறுமார்க்கத்தில் கோவையிலிருந்து சென்னைக்கு நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படவுள்ளது.

திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள் வழியாகப் பயணிக்கும் இந்த ரயில் இன்று மாலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த சோதனை ஓட்டத்தில் தெற்கு ரயில்வேயின் DOM உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சோதனை ஓட்டம் மூலம், ரயிலில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா? என ஆய்வு செய்யப்படவுள்ளது.



இந்த அதிக வேக வந்தே பாரத் ரயிலில், மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. அதில் 2 பெட்டிகள் எக்ஸிக்யூடிவ். அது மட்டுமின்றி, உயர்தர குஷன் சீட்கள், 360 டிகிரியில் சுழலும் வகையில் இருக்கைகள், சிசிடிவி கேமரா, ரயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் மைக் வசதி, நவீன கழிவறை, ஏசி, வைஃபை, ஜிபிஎஸ், எல்.சி.டி திரைகள், தனித்தனி விளக்குகள் என பல வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளது.

இந்த சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து, சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். அப்போது, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான 37 கிலோமீட்டர் தூர அகல ரயில் பாதை, தாம்பரம் - செங்கோட்டை இடையில் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதேபோல், செகந்திராபாத் - திருப்பதி இடையிலான அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் அன்றைய தினம் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...