சினிமா தியேட்டருக்கு நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

சென்னை ரோகிணி திரையரங்கில் நடிகர் சிம்பு நடித்த பத்து தல படத்தை பார்க்க நரிக்குறவர்கள் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் உருவான பத்து தல படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்களில் இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக உரிய டிக்கெட்டுடன் வந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தியேட்டர் ஊழியர்கள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறிது நேரம் கழித்து படம் பார்க்க நரிக்குறவர்கள் இன மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தீண்டாமை அடிப்படையில் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று டிவிட்டரில் வெளியானது.

அதை டேக் செய்த இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், கலை அனைவருக்கும் பொதுவானது. நரிக்குறவர் இன சகோதரி மற்றும் சகோதரர்கள் முதலில் படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது ஏற்றுகொள்ளமுடியாதது என தியேட்டர் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.



இதனிடையே, இந்த விவகாரம் குறித்து ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், பத்து தல படமானதுU/A சர்பிகேட் படம். எனவே, சட்டப்படி 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க அனுமதிக்கூடாது. தியேட்டருக்கு உரிய டிக்கெட்டுடன் வந்த நபர்கள், 2,6,8 மற்றும் 10 வயதில் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

எனவேதான் தியேட்டர் பணியாளர்கள் குழந்தைகளுடன் படம் பார்க்க முடியாது எனக்கூறி அனுமதி மறுத்தனர். பிரச்சனையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், பார்வையாளர்களுடம் கூடிய வேறுவேறு கோணங்களில் திசை திருப்பப்பட்டது.

எனவே, சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டும், இந்த பிரச்சனையை முடிவுக்குகொண்டுவரும் வகையிலும், குழந்தைகளுடனே அவர்கள் படம் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. அவர்கள் படம் பார்த்ததற்கான ஆதாரமாக வீடியோ ஒன்றையும் ரோணிகி தியேட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...