பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் குழு!

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்தகி கோன்சால்வெசு மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர், டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.



கோவை: முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குறித்து தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம் எடுக்கப்பட்டது. இந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இந்த ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம், முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. அனாதை யானையான ரகுவின் கதை. இந்த யானையை பொம்மா மற்றும் பெள்ளி என்ற தம்பதி பராமரித்து வந்தனர்.

இந்த ஆவணபடத்தில் யானை மற்றும் தம்பதியிடையேயான உறவு மற்றும் பாசப்பிணைப்பு மட்டும் படமாக்கப்படவில்லை. சுற்றியிருந்த இயற்கைச்சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.



இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வெசு மற்றும் தாயாரிப்பாளர் குனீத் மோங்கா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...