வால்பாறையில் பசுவை அடித்துக் கொன்ற சிறுத்தை - தானியங்கி கேமிராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுவை சிறுத்தை அடித்துக்கொன்றது. அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் பகுதியில் சுப்பையா என்பவர் மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை மாடுகளை தேயிலை தோட்டத்தில் மேச்சலுக்கு விட்டுள்ளார்.

மாலை இரண்டு மாடுகள் மட்டும் வீட்டிற்கு வந்தன. ஒரு பசு மாடு வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து சுப்பையா மற்றும் உறவினர்கள், காணாமல் போன மாட்டை தேயிலை தோட்டத்தில் தேடினர். மாடு கிடைக்காததால், இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த முத்துராஜ் தலைமையிலான வனத்துறையினர், பசு மாட்டை தேடினர்.



அப்போது, காணாமல் மாட்டை சிறுத்தை கொன்று தேயிலை தோட்டத்தில் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, இறந்த மாட்டின் உடலை மீட்ட வனத்துறையினர், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...