கனிமவளக் கொள்ளை விவகாரம் - கோவை செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக கண்டனம்!

கோவையில் கனிமவளக் கொள்ளை தொடர்பாக வீடியோ எடுக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கோவை மாவட்ட பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் செய்தியாளர்களுக்கு துணை நிற்பதாகவும் அறிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகக் கூறி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் அண்மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், கனிமவளக் கொள்ளை தொடர்பாக செய்தி சேகரிக்கவும், வீடியோ எடுக்கவும் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பாலாஜி என்பவர் நேற்று கடுமையாகத் தாக்கப்பட்டார். இதற்கு பல்வேறு பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கனிமவளக் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதுபோல் திமுக அரசு நாடகமாடியதாகவும், தற்போது கனிவளக் கொள்ளையை மீண்டும் ஆரம்பித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதை செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பாலாஜி மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு கோவை மாநகர் மாவட்ட பாஜக கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு தாக்குதலில் ஈடுபட்ட குண்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பாலாஜி உத்தமராசாமி, பத்திரிகையாளர்களுடன் எப்போது துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...