உடுமலை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவல் - மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு!

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை வனப்பகுதியில் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கடமான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் அரிய வகை தாவரங்களும் வளர்ந்து வருகிறது.

தற்போது கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் கருகத்தொடங்கி உள்ளது. இதனால் திருப்பூர் வனக்கோட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும் காட்டுத்தீ குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



காட்டு தீயினால் பாதிப்புகள் அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலகத்தில் அனைத்து செட்டில்மென்ட்டை சேர்ந்த மூப்பர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் பேசியதாவது:



வனம் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் மிக முக்கியமானது காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கும். காட்டுத்தீ ஏற்படுவதால் சோலைக்காடுகள் மற்றும் புல்வெளிகளில் உள்ள இயற்கை நீரூற்றுகள் பாதிப்படைந்து அடைபடுகின்றன.இதன் காரணமாக ஓடைகள், சிற்றோடைகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது.

மக்களுக்கு நோய்கள் மேலும் சோலைக்காடுகள், புல்மலைகள் காட்டுத்தீயினால் பாதிப்பு ஏற்படுவதால் பெய்கின்ற மழைநீர் சேமித்து வைக்க இடமில்லாததால் விரைவில் சென்று கடலில் கலந்து விடுகிறது. மேலும் காட்டுத்தீயினால் மர இலைகள் சேமித்து வைத்துள்ள கார்பன்டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து மக்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகிறது.

காட்டுத்தீயினால் புழு, பூச்சிகள் உள்பட பல்வேறு வன உயிரினங்கள் பாதிப்படைந்து அவ்விடத்தில் பல்லுயிர் பெருக்கம் பெரிதும் பாதிப்படைகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.



இதில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதியகத்தைச் சேர்ந்த ரவிக்குமார், முல்லை உள்ளிட்ட வனத்துறை பணியாளர்கள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...